Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“விவசாயிகளின் போராட்டத்துக்கு தோள் கொடுப்போம்!" நெகிழ்ந்த விஜய் சேதுபதி

விவசாயிகள்  ஆவணப்படம்

யிர் கருகியதைக் கண்டு, நின்ற இடத்திலே அதிர்ச்சியில் மரணமடைந்தனர் விவசாயிகள். வங்கிகள் தரும் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர் விவசாயிகள். இந்த அவலம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைக்காக கத்தி கத்தி நாக்கு வறண்டுபோன போராட்டக்காரர்களும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், தேங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில்தான் விவசாயிகளின் மரணத்தைப்பற்றி ஆழமாகப் பேசும் ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி இயக்கிய இந்த படத்துக்கு 'கொலை விளையும் நிலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தின் திரையிடல் விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, 

''பாதிக்கப்பட்ட விவசாயிகளின்  வீட்டிலேயே  நம்மையெல்லாம் உட்கார வைத்துப் பார்க்கச் செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். இவையெல்லாம் யாரால் நடக்கிறது? எவரால் நடக்கிறது எனப் பேசிக்கிட்டே இருக்கிறோம். நாம போராடுவதும் ,போராட்ட முறையும் அவர்களுக்குப் பழகிப் போச்சி. இந்தப் போராட்டங்கள் அவர்களுக்கு நாள்தோறும் டிபன் சாப்பிடற மாதிரியாக இருக்கலாம். இந்த ஆவணப்படம் பெருவாரியான மக்களைப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்மை சீக்கிரமாகவே இது இல்லைனா அது என ஏமாற்றி சிதறடிச்சி  திசைதிருப்பி அழகா அரசியல் பண்ணிகிட்டு இருக்காங்க. இதைப் போராடக் கூடியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். போராட்ட முறையும் மாற வேண்டும். ஆளுங்க மாறிக்கிட்டே இருக்காங்க. ஆனா நிலைமை மட்டும் மாறவே இல்லை. போராட்டத்தை வழிநடத்துற தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி... அதனை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு போகணும். அதே நிலையில், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும்" என்றார்.

விஜய் சேதுபதி - ராஜுவ்காந்தி

பின்னர் பேசிய இயக்குநர் லிங்குசாமி, "காவிரியில்தான் நான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்போது கேரளா போன்று பசுமையாக இருந்த பகுதிகள் தற்போது வறண்டு பாலைவனமாகி விட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்திலிருந்து பஞ்சம் பிழைக்க தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தோம். அப்போது இருந்த நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கவலை கொள்கிறேன். எப்படி இருந்த இடங்கள் தற்போது பாலைவனமாக மாறிவிட்டதே என எண்ணத் தோன்றுகிறது. இப்படிப் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆவணப்படமாக கொடுத்துள்ள ராஜீவ்காந்திக்குப் பாராட்டு சொல்வதா... அல்லது நன்றி சொல்வதா... எனத் தெரியவில்லை. காட்சிப்படுத்தப்பட்டவை அனைத்தும் உணர்வுபூர்வமானவை. படத்தில் டப்பிங் பேசுவதை விட, பாதிக்கப்பட்ட நபரே அப்படியே தனது உணர்வுகளைக் கொட்டுவதால், அதன் வலியை நன்கு உணர முடிகிறது" என்றார். 

ஆவணப்படத்தின் இயக்குநர் ராஜீவ்காந்தியிடம் பேசியபோது, "விவசாயிகளின் பிரச்னைகளைச் சொல்லும் ஆவணப்படம் என்று பிரபலங்களிடம் சொல்லியபோது என்னைத்  தட்டிக் கொடுத்ததோடு அவர்களுடைய முழு ஆதரவையும் அளித்தனர். எவ்வளவு பிசியான நேரத்திலும் ராஜூ முருகன்,சமுத்திரக்கனி போன்றோர் நேரத்தை ஒதுக்கிக்கொடுத்து அவர்களுடைய பங்களிப்பை அளித்தனர். சமுத்திரக்கனி இந்தப் படத்துக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவரிடம் ஸ்கிரிப்டைக் கொடுத்தபோது அதில் எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே ஏற்று பின்னணிக் குரல் கொடுத்தார். விவசாயிகளையும் விவசாயத்தையும் இவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது தெரிந்தது" என்றார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close