Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா முழுவதும் விவசாயிகள் விடுதலைப் பயணம்!

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றாக இணைந்து கிசான் முக்தி யாத்ரா என்ற பெயரில் விவசாயிகளுக்கான விடுதலைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். முதல்கட்டப் பயணம் கடந்த 6-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் துவங்கியது. மகாராஷ்டிரா, குஜராத், உத்திரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, தீர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் இப்பயணத்தின் முதன்மை நோக்கம். ஜெய் கிசான் அந்தோலன் அமைப்பின் தலைவர் வி.எம்.சிங், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, யோகேந்திர யாதவ், ராஜூவ் செட்டி, ராம் பால் ஜாட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் சங்கத் தலைவர்களின் ஏற்பாட்டில் இப்பயணம் நடபெறுகிறது.  

கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் மாவட்டம் பிப்லியா மண்டி என்ற பகுதியில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளைப்பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகப் பிப்லியா மண்டியை நோக்கி  விவசாயிகள் விடுதலைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுருந்தார்கள். புத்தா என்ற இடத்திலிருந்து துவங்கிய பேரணி 5 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார்கள்.  ஜூலை-7ம் தேதி திவாஸ் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதுபோல் பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட கிராமங்களில் தினமும் பொதுக்கூட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இப்பயணத்தில் தமிழ்நாட்டிலிருந்து சுவாமிமலை சுந்தர விமலநாதன், ஜோதிமுருகன், இளங்கோவன் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இது குறித்து விமலநாதனிடம் பேசினோம், 'அகில இந்திய அளவில்
விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படுவது இதுதான் முதல்முறை. இதற்கு அடித்தளமிட்டவர் அய்யாக்கண்ணு. டில்லியில் 41 நாள்கள் அவர் நடத்திய போராட்டத்தின் மூலமாகதான் பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் ஒன்றிணைந்தோம். தற்பொழுது துவங்கியுள்ள முதல்கட்ட பயணம் 12 நாள்கள் நடைப்பெறுகிறது. ஜூலை 18-ம் தேதி டில்லியில் அய்யாக்கண்ணூ நடத்தும் போராட்டத்தில் இப்பயணம் நிறைவுப்பெறுகிறது' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close