Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர்களைக் கைதுசெய்ய வேண்டும்- இந்து மக்கள் கட்சி!

பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாள்தோறும் இந்த நிகழ்ச்சி குறித்து சமூக ஊடகங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் பதியப்படுகின்றன. காயத்ரி  ரகுராம் 'சேரி பிஹேவியர்' என சக நடிகையைப் பற்றிக் கூறியிருப்பதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யக்கோரி மதுரை கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்து, நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மக்களின் கலாசாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் இருப்பதால் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும், இதில் பங்குபெறுபவர்கள் ஆபாசமாக உடை உடுத்துவதாலும் இதைப் பார்ப்பவர்கள் மனநிலையைச் சீரழித்துவிடும் என்பதால் கமல்ஹாசன் உள்ளிட்ட 14 பேரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது .

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close