Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் பகுதி கர்நாடகத்தின் குடகு மலைப்பகுதி. இது கூர்க் என்று இப்போது அழைக்கப்படுகிறது.  மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் தொட்டே குடகு நம் தமிழகத்தின் கீழ் இருந்த சிற்றரசாகவே இருந்து வந்துள்ளது. சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று அழைக்கப்பட்டதால்தான் அங்கிருந்து ஓடி வந்த காவிரியை 'பொன்னி' என்றே அழைத்தோம். காலம் மாறியது, மன்னர்கள் ஒழிந்தார்கள், கிழக்கிந்தியக் கம்பெனி வந்தது. 1834-ம் ஆண்டு மைசூர் அரசை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியின் கீழ் இணைத்துக்கொண்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒருமித்த இந்தியா உருவானது. அப்போது தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையில் தனிப்பகுதியாக துளு மொழியின் அடிப்படையில் குடகு இருந்து வந்தது. மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலை 1956-ம் ஆண்டில் வலுத்து வந்தது. அப்போது குடகு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று மக்களால் கூறப்பட்டது. பிரதமர் நேரு தமிழகம் அல்லது கர்நாடகா என ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை கூறினார்.

காவிரி

இதனால் குடகுப்பகுதி தலைவர்கள், தமிழகத்துடன் இணைய விரும்பினர். ஆனால், அப்போது தமிழகத் தலைவர்கள் யாருமே குடகு பகுதியைக் கண்டுகொள்ளவே இல்லை. சென்னையைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தந்தைப் பெரியார் மட்டுமே குடகுப்பகுதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமெனக் குரல் எழுப்பினார். இதைக் கவனத்தில் கொண்டு வர எழுதினார். போராட்டம் நடத்தினார். யாருமே கண்டுகொள்ளவில்லை. கர்நாடகா குடகுப்பகுதியைக் கண்டுகொள்ளவில்லை. கோலார் பகுதியை தக்கவைக்கவே விரும்பியது. இறுதியாக மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா எனும் தீர்க்கதரிசி விஞ்ஞானி ஒருவர் அறிவுறுத்தலால் கர்நாடகம் குடகுப்பகுதியை 1956-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.  ஆம், குடகு கர்நாடகாவுக்குப் போனது. காவிரி உரிமையும் அவர்களுக்கே என்று ஆனது. இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. குடகை விட்டு விட்டு இன்று நதிநீர் ஆணையத்தை நம்பி இருக்கிறோம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது இப்படிதான் போல. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close