Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்?

துணைக் குடியரசுத் தலைவர் அன்சாரியின் பதவி காலம் முடிவுக்கு எருகிறது. எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர்  பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது. அதேபோல எதிர்க்கட்சி வரிசையில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து 12-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற 18- கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சோனியா காந்தி செய்தியாளர் மத்தியில் அறிவித்தார். "காந்தியின் பேரனும், மேற்கு வந்த ஆளுநராகவும் பணியாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி, காங்கிரஸ் சார்பில்  நிறுத்தப்படுகிறார் " என்றார்.

மோடி


இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணைக்குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து பி.ஜே.பி மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்துவருகின்றனர். தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. தென்மாநிலங்களில் பி.ஜே.பி-யால் கால் ஊன்ற முடியவில்லை. இதனால், தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்புத் தரலாமா என்று மேலிடத் தலைவர்கள் திட்டமிட்டிருப்பதாக க் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close