Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியைச் சந்தித்து ஆதரவு கோரினார் கோபாலகிருஷ்ண காந்தி!

ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், எதிர்க்கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு வேட்பாளர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கோபால கிருஷ்ண காந்தி - கருணாநிதி


அதேபோல, துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதியாக மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து அவர் நாடு முழுவதும் சென்று, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, கோபாலகிருஷ்ண காந்தி, நேற்று தமிழகம் வந்தார். இதனையடுத்து, கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து  ஆதரவு கோரினார். 

கோபால கிருஷ்ண காந்தி - கருணாநிதி


அதேபோல, தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினையும், கோபாலகிருஷ்ண காந்தி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close