Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர்நாத் தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

பாகிஸ்தானியர்கள்

மர்நாத் புனிதப்பயணம் சென்ற பக்தர்கள் மீது கடந்த 10-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமர்நாத் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதுகுறித்து விவரங்கள் தெரியவந்துள்ளன. உளவுப் பிரிவு அளித்துள்ள தகவல்களின்படி, இரண்டு பாகிஸ்தானியர்கள், தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லக்‌ஷர் இ தொய்பா கமாண்டர் அபு இஸ்மாயில் ஆகியோர்தான் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரண்டு இருசக்கர வாகனங்களில் ஊடுருவிய தீவிரவாதிகள், தாக்குதல் நடத்திவிட்டு அந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்று விட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக, காஷ்மீர் மாநிலம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close