Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முதல் குடிநீர் கேட்டு மறியல் வரை....!

போராட்டங்கள்

மிழகம் என்றுமே போராட்டத்துக்குச் சளைத்த மாநிலம் அல்ல என்று நிரூபித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைப் பார்த்து இந்தியாவே வியந்தது. அதேபோல அவசர கால சட்டத்தை இந்திரா காந்தி அமல்படுத்தியபோது, அதற்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தார்கள். 1980-களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்கள் உணர்வுபூர்வமானவை என்றே சொல்லலாம். இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோதும், மீண்டும் தமிழகம் ஒரு முறை கொந்தளித்து அடங்கியது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடன், பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகியவை உயர்ந்தன. இதனால், அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாற்றுத் திறனாளிகள் தொடர்போராட்டங்கள் நடத்தினர். அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்செல்கிறோம் என்று சொல்லி மாற்றுத்திறனாளிகளை நடுவழியில் தவிக்க விட்ட கேவலமும் தமிழகத்தில்தான் நடந்தது.

எங்களைக் கவனியுங்கள்...

தண்ணீர் கேட்டுப் போராட்டம், வறட்சி நிவாரணம் கேட்டுப் போராட்டம், மதுவிலக்குக்கு போராட்டம், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போராட்டங்கள் என்று தமிழ்நாட்டில் தினந்தோறும் 47 போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்கள் நடப்பதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஆளும் அரசாங்கங்கள் மக்களுக்காகப் பணி செய்வதில் அலட்சியமாக இருக்கும்போது எங்களைக் கொஞ்சம் கவனிங்க என்ற ரீதியில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் மதுவிலக்குக் கேட்டு, டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. உச்சகட்டமாக செல்போன் டவரில் ஏறிய சசிபெருமாள் இறந்து போனார். மதுவிலக்குக் கோரி போயஸ் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு தன்னந்தனி ஆளாக நந்தினி என்ற மதுரைப் பெண் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
அதேபோல சட்டப்பஞ்சாயத்து இயக்கம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தன. போராட்டத்தில் தமிழக முதல்வரை கேள்வி கேட்கும் கோவனின் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் அவர் கைதும் செய்யப்பட்டார்.

மாணவர்கள் போராட்டம்

கதிராமங்கலம்

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸார் கடுமையாகத் தாக்கினர். காவிரி பிரச்னைக்காக டெல்டா மாவட்டங்களில் தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகளுக்காக தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகப்போராட்டங்கள் நடத்தின. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைப் பெரியாறு, மேட்டூர் அணை ஆகியவற்றில் தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

தென்மாவட்டங்களில் குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன்  பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டங்கள் நூதனமான முறையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. ஆனால், போராடும் மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பதில் எந்த ஒரு அரசும் அக்கறையோடு செயல்படுவதில்லை. மக்கள் கருத்துகள்  மதிக்கப்பட்டு இருந்தால், போராட்டங்களுக்கு அவசியமே இல்லாமலே இருந்திருக்கும். ஆனால், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால்தான், போராட்ட வடிவத்தையே மக்கள் கையில் எடுக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close