Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலுவலகம் செல்ல தினமும் 1,250 கி.மீ பயணிக்கும் ஆச்சர்ய இளைஞர் !

அமெரிக்காவைச் சேர்ந்த "கெர்ட் வான் படின்ஸ்கி" ஒவ்வொரு நாளும் தன் அலுவலகத்துக்குச் செல்ல 1,250 கி.மீ தூரம் பயணிக்கிறார். இந்தப் பயணத்துக்கு இரண்டு கார்கள் மற்றும் ஒரு விமானத்தை அவர் பயன்படுத்துகிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் படின்ஸ்கி, தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். அலுவலகத்துக்குத் தயாராகி தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மாடல் காரை எடுத்துக்கொண்டு, 19 கி.மீ தூரத்திலிருக்கும் 'பாப் ஹோப்' விமான நிலையத்துக்கு 15 நிமிடங்களில் சென்றுவிடுகிறார். தினமும் சென்று வருவதால் விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு வழிமுறைகளை அவர் பின்பற்றத் தேவையில்லை. 

விமானம் மூலம் பயணிக்கும் இளைஞர்

எட்டு பேர் அமரக்கூடிய சிறு விமானத்தில் 570 கி.மீ தூரம் பயணித்து ஓக்லேண்டை அடைகிறார். அங்கு அவரின் செவர்லே எலக்ட்ரிக் கார் நின்றுகொண்டிருக்கும். அதை எடுத்துக்கொண்டு 20 நிமிடங்களில், 32 கி.மீ பயணித்து சான்பிரான்சிஸ்கோவிலிருக்கும் தன் அலுவலகத்துக்கு காலை 8.30 மணியளவில் சென்றடைகிறார். "ஸ்லீப்பிங் ட்ராக்" எனப்படும் தூக்கத்தைக் கண்டறிந்து அளவிடும் மோதிரம் போன்ற ஒரு கேட்ஜெட்டைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துகிறார் படின்ஸ்கி. தினமும் விமானத்தில் பயணிக்கும் நேரங்களில் அலுவலக வேலைகளைப் பார்க்கிறார் அல்லது அந்த நேரத்தைத் தனக்குப் பிடித்த விஷயங்களைப் பார்ப்பது, படிப்பது போன்ற வேலைகளைச் செய்துகொள்கிறார். 

லாஸ் ஏஞ்சல்ஸில் வெயில், சான்பிரான்சிஸ்கோவில் குளிர், மழை என ஒவ்வொரு நாளும் இரு வேறு விதமான சீதோஷ்ணத்தை அனுபவிக்கிறார். மாதம் விமான கட்டணமாக ஒன்றரை லட்சம் செலுத்துகிறார். அவர் பயன்படுத்துவது எலெக்ட்ரிக் கார்களை. அவர் உபயோகப்படுத்தும் விமானமும் குறைந்த அளவிலான கார்பனை வெளியேற்றும் வகையிலானது. இதனால், இயற்கைக்கு அதிக சேதாரம் இல்லாமல்தான் இத்தனை தூரம் பயணிப்பதாக சொல்கிறார். இரவு திரும்பும்போது விமான நிலையத்தில் தன் கார்களை சார்ஜ் செய்து கொள்கிறார். 

"என் நிறுவனத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் கொண்டு வர முடியாது. என் குடும்பத்தை சான் பிரான்சிஸ்கோ கொண்டு போக முடியாது. இரண்டையும் என்னால் பிரிய முடியாது. அதனால் இப்படியான பயணம்..." என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் கெர்ட் வான் படின்ஸ்கி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close