Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் நடக்குதாம்!

செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை  எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாகவும், இந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். 

ரூபாய், நோட்டு


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ரிசர்வ் வங்கிக் கிளைகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக, நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், "வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை. ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, மற்ற விடுமுறை நாள்களைக் கூட ரத்து செய்துவிட்டு 500, 1000 ரூபாய் தாள்களை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன், இந்தியாவில் 17 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இப்போது பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் 15 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது" என்றார் அவர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close