Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்ற மகளை 20 ஆண்டுகளாக அடைத்து வைத்த பெற்றோர்... மீட்ட போலீஸார்!

கோவா

தொடர்ந்து இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தாலே சிலருக்குப் பைத்தியம் பிடிக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், 20 ஆண்டுகளாக ஒரு பெண் தன்னுடைய வீட்டில் இருக்கும் ஓர் அறையில் தன்னுடைய பெற்றோர்களால் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

கோவா மாநிலத்தில் பனாஜி தொகுதியில் இருக்கிறது கன்டோலிம் என்னும் கிராமம். அங்கு 50 வயதை நெருங்கி இருக்கும் ஒரு பெண்மணியைக் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டின் பின்புறமாக இருக்கும் அறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்போது அவரைக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அந்தப் பெண்ணை மும்பையைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் முடித்து வைத்துள்ளனர். அவர் வீட்டுக்குப் போன பிறகுதான் அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது. அதனால், அந்தப் பெண் மீண்டும் தன் தாயார் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்தது முதல் அவருடைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அவருடைய குடும்பத்தினர், அவரை வீட்டின் பின்புறம் இருக்கும் ஓர் அறையில் அடைத்து வைத்தனர். அவருக்கு ஒவ்வொரு வேளை உணவும் ஜன்னல் வழியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரிந்த என்.ஜி.ஓவைச் சேர்ந்த ஒருவர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், போலீஸார் வந்து அவரை மீட்டுள்ளனர். அந்த அறையில் இருந்து அவரை மீட்கும் போது அவர் ஆடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளார். அங்கிருந்து அவரை மீட்டு, மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர் . "விசாரணை இன்னும் தீவிரமடையவில்லை. விரைவில் அவருடைய குடும்பத்தினர் விசாரிக்கப்படுவார்கள்" எனப் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close