Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்றிக்காய்ச்சலுக்குத் தனி வார்டுகள் அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

பன்றிக்காய்ச்சல்

“ஸ்வைன் ஃப்ளூ" என்று சொல்லக்கூடிய பன்றிக்காய்ச்சல், 2009 - 10ல் அதிகமாகப் பரவியது. அதற்குபின், கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்தது. ஆனால், அனைத்து இறப்புகளும் பன்றிக்காய்சல்மூலம் நிகழவில்லை; நோயாளிகளின் மெத்தனத்தால்தான் நடந்துள்ளது. அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனையில் சேர்த்துவிட்டால், இந்தக் காய்ச்சலை உடனடியாகத் கட்டுப்படுத்திவிடலாம். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் மரணம் அதிகரித்துள்ளது என்பது பொய்யான கருத்து என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறுத்துவந்தார்.

இந்நிலையில், மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், ஒருசில மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே, பன்றிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனை வசதிகள் உள்ளன.

இதனால், பல இறப்புகள் பன்றிக்காயச்சல்மூலம் நிகழ்கின்றன. மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்புகளைக் கண்டறியும் நவீன பரிசோதனை வசதிகளை மருத்துவமனைகளிலும், சுகாதார அமைப்பு சிகிச்சை அளிக்க, பாதுகாக்கப்பட்ட தனி வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் ஆகியோர் அங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர், “தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான தனி வார்டுகளை நான்கு மாதத்துக்குள் அமைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close