Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சசிகலாவுக்கு உணவில் விஷம் வைக்க வாய்ப்பு!” - சிறைத்துறை டிஜிபி

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், அவருக்கு வி.ஐ.பி உபச்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயணா ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சமாக அளித்துள்ளதாக அவரின் ஜூனியர் அதிகாரி சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். 

டிஐஜி ரூபா-டி.ஜி.பி சத்யநாராயணா

குற்றச்சாட்டை மறுத்துள்ள டி.ஜி.பி சத்யநாராயணா, “மொத்தமாக சமைக்கப்படும் சிறை உணவில் சசிகலாவுக்கு விஷத்தை கலந்து வழங்கி விட வாய்ப்பிருப்பதால், சிறை உணவையே அவருக்குத் தனியாக தயாரித்து வழங்கினோம். பாதுகாப்புக்காகவே இதை செய்தோம். நீதிமன்றம் காட்டிய வழியை நாங்கள் பின்பற்றினோம். ரூபா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். விளக்கம் கேட்டு 'மெமோ ' அனுப்பியுள்ளேன் '' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில். டிஐஜி ரூபா,'' எனது வேலை அறிக்கை அளிப்பதுதான். அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்து மீடியாக்களிடம் பேச முடியாது. எனது வரலாற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என டிஜிபி கூறியிருக்கிறார். இணையத்தில் தேடிப் பாருங்கள். என் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் சொல்லுங்கள். ஆதாரமில்லாமல் எந்தக் குற்றச்சாட்டையும் நான் வைக்கவில்லை. பாரபட்சமற்ற விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்'' எனக் கூறியுள்ளார். 

கர்நாடக சிறைத்துறை டிஜிபி மீது புகார் கூறிய ரூபா, தென்மாநிலங்களில் சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி இந்தப் பதவியில் ரூபா அமர்ந்து மூன்று வாரங்கள்தான் ஆகியிருக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close