Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கங்கா நதியில் குப்பைக் கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

கங்கையில் குப்பையைக் கொட்டினால் ரூ.50 ஆயிரம் விதிக்ககப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கங்கையில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். பக்தர்கள் விட்டுச் செல்லும் கழிவு, ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் என கங்கை பாழாக்கப்பட்டு அசுத்தம் அடைந்துள்ளது. கங்கையைச் சுத்தம் செய்ய மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கங்கையில் குப்பைக் கொட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, அருகில் உள்ள தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கை நதியிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை கங்கையை அசுத்தப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளைத் தேசிய பசுமைத் தீர்பாயம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close