Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எண்ணெய்க் கலப்பட விவகாரத்தில் மத்திய, மாநிலச் செயலாளர்கள் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

எண்ணெய்க் கலப்பட விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய, மாநிலச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 


எண்ணெய்க் கலப்படம் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  மனுதாரர் தரப்பில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'அனைத்து வகை எண்ணைய் தயாரிப்புகளிலும் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு நிபுணர் குழு அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், சசிதரன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மத்திய, மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்கள் விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். மேலும் 'உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close