Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘துணைக்கு வந்தாலே நக்சலைட்டா?’ - சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய வளர்மதி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி, போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிராக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

மாணவி வளர்மதி

'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் நேற்று கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார் மாணவி வளர்மதி. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய வளர்மதியின் வழக்கறிஞர் தமயந்தி, “அரசுக்கு எதிராகக் கலகத்தை உருவாக்கியதாகவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையில் படித்து வருகிறார் வளர்மதி. ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கல்லூரி வாசலில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார். இவருடன் வந்த காரணத்துக்காக, ஜெயந்தியையும் கைது செய்துள்ளனர். இவர்களது வீடுகளில் உள்ள துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றி, நக்சல் குழுவுக்கு ஆள் சேர்ப்பதாகப் போலீஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள். அவர் ஒரு கல்லூரி மாணவி எனக் கூட பார்க்காமல் போலீஸார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து, உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவருக்கும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close