Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்டாலினுக்குப் பக்குவம் தேவை'- இல.கணேசன் எம்.பி., பேட்டி

நாகர்கோவிலில் பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கும் நி்கழ்ச்சி நடந்தது. அதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் எம்.பி கலந்துகொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், 'பா.ஜ.க, பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதைக்  கொள்கை ரீதியாகக் கொண்டுள்ளது. ஆனால், இப்போது கொண்டுவரபட்ட சட்டம், மாட்டிறைச்சியைத் திங்கக் கூடாது என்பதற்காக அல்ல. இறைச்சிக்காகக் கொண்டு செல்லக் கூடிய மாடுகளை சித்திரவதை செய்யக் கூடாது  என்பதற்காக. தற்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் வந்துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. அனைத்துத் துறைகள் குறித்து கருத்துச் சொல்லும் நீதிமன்றம், நீதிமன்ற செயல்பாடுகளை நாங்களே எங்களுக்குள் பார்த்துக்கொள்வோம் எனச் சொல்லக் கூடியதில் நியாயம் இல்லை.

தி.மு.க-வின்  செயல் தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை குற்றம் சாட்டி வருவதில் அரசியல் நாகரிகம் இல்லை. அவருக்குப் பக்குவம் தேவை.

இல.கணேசன் 

காஷ்மீர் பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டது ராகுல் காந்தியின் தாத்தாதான். துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து யாரை நிறுத்தலாம் என ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் பேசி இருக்கலாம். ஒற்றுமை வந்து விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் நினைக்கிறது.
நாட்டில் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டது காங்கிரஸ் கட்சிதான். எதிர்காலமே இல்லாத நிலையை நோக்கி தி.மு.க சென்று கொண்டிருக்கிறது. 1980-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது. மீனவர் பிரச்னையில் கேள்வி கேட்க  தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதையில்லை. பா.ஜ.க ஆட்சியில் மாவோயிஸ்டுகள் 80 சதவிகிதம் ஒடுக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு குண்டு வீசப்பட்டதற்கு குற்றம் செய்தவர்கள் எந்தக் கட்சி எந்த மதம் என்றும் பார்க்காமல் மாநில அரசு தண்டனை வழங்க வேண்டும். 

தமிழக அரசு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அப்போதும் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். தமிழகத்தில் பயங்கரவாதிகள் இல்லை என்று மறுப்பது தவறு. இனி தமிழக அரசு பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்திலும் ஊழல் என்று கூறுவது கமல்ஹாசனின் புதிய கண்டுபிடிப்பு. ஊழல் முன்பிருந்தே  நடந்து கொண்டுதான் இருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close