Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.டி ஊழியர்களுக்கு தனிச் சட்டம் வேண்டும்..! தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கோரிக்கை

'ஊழியர்களை சட்ட விரோதமாகப் பணி நீக்கம் செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்' என்று தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 


தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ''இந்திய அளவில் தனியார் துறைகளில், ஐ.டி துறைதான் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக உள்ளது. 2014-ல் டாடா கன்சல்டன்சி ஆயிரக்கணக்கானவர்களை வேலையைவிட்டு அனுப்பத் தொடங்கியது. அப்போதே நாங்கள் தகவல் தொழில்நுட்ப  ஊழியர்கள் மன்றத்தைத் தொடங்கினோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்ட விதி விலக்கைப் பயன்படுத்திக்கொண்டு 13 - 15 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்குப் பொருந்தும் வகையில் ஐ.டி ஊழியர்களைத் 'தொழிலாளர்கள்' என்று மாற்றியமைக்க வேண்டும். சட்ட விரோதமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கச் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஐ.டி நிறுவனங்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்வதால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன'' என்று தெரிவித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close