Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப் பிரதேச முதல்வர் சிவப்புக் கம்பள வரவேற்புக்குத் தடா போட்டுள்ளார்!

யோகி ஆதித்யானந்த்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பகுதிகளைப் பார்வையிடச் செல்லும்போது அதிகாரிகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றதில் இருந்து மக்களின் நலன் கருதி அரசுப் பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை இயக்கும்போது மொபைல் போனில் பேசுவதைத் தடுத்தல் என பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் ஒவ்வொர் உத்தரவுகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் பகுதிகளைப் பார்வையிட வரும்போது தனக்கு ஏ.சி வசதி, சிவப்புக் கம்பளம் போன்ற எந்த ஆடம்பர வசதிகளையும் செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் டியோரியாவில் உள்ள கோர்க்காபூர் பகுதிக்குச் சென்றிருந்தபோது அதிகாரிகள் முதல்வருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தவிர்த்த முதல்வர் தன்னை கவனிப்பதில் கவனம் செலுத்தாமல், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியதோடு, இனிமேல்தான் செல்லும் பகுதிகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கக்கூடாது எனத் தடா போட்டுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close