Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறிவாலய பஞ்சாயத்தில் மதுரை மாநகர தி.மு.க ...!  

தி.மு.க.வின் மதுரை மாநகர் வடக்குச் செயலாளர் வேலுச்சாமி மீது தி.மு.க நிர்வாகிகள் சிலர் கொடுத்த புகார் சம்பந்தமாக அறிவாலயத்தில் விசாரணை நடந்தது. இந்த நிலையில், மாநகர் வடக்குச் செயலாளர் மாற்றப்பட்டு புதிய செயலாளர் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியதால் மதுரை மாநகர தி.மு.க கலகலத்துக் கிடக்கிறது.

கடந்த சட்டமன்றத்தேர்தலில் மதுரை தெற்குத்தொகுதியில் மல்லிகை பாலச்சந்திரன் என்பவருக்கு தி.மு.க-வில் சீட் ஒதுக்கப்பட்டது. சௌராஷ்டிரா மக்களின் வாக்குகளை மொத்தமாக வாங்க வேண்டுமென்ற அடிப்படையில் சீனியர் கட்சி நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு புதிதாக கட்சியில் சேர்ந்த பாலச்சந்திரனுக்கு சீட் வழங்கினார் ஸ்டாலின்.

ஆனால், கட்சியினர் சரியாக வேலை செய்யாததால் பாலச்சந்திரன் தோல்வியுற்று, அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன் (கூவத்தூர் புகழ்) வெற்றி பெற்றார். ''தி.மு.க. சுலபமாக வெற்றி பெற்றிருக்கும். மாநகர் வடக்குச் செயலாளர் வேலுச்சாமி முழுமையாக வேலை செய்யாததாலும், கட்சி கொடுத்த பணம் ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு செலவு செய்யாமல் அவரே அமுக்கிக்கொண்டதாலும், நான் தோல்வியுற்றேன், அதன் பிறகு என்னைக் கட்சி நிகழ்ச்சிக்கு எதற்கும் அழைப்பதில்லை, நானாக சென்றாலும், சாதியை சொல்லி திட்டி, மிரட்டுகிறார். எனவே, இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்று இன்னும் பல புகார்களைக் கூறி  ஸ்டாலினுக்கு பாலச்சந்திரன் புகார் மனு அனுப்பினார் . 


 

இந்த நிலையில்தான் நேற்று விசாரணைக்கு வரும்படி மதுரை மாநகர் வடக்கு கழகச் செயலாளர் மற்றும் பகுதிக்கழக நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு வரும்படி அறிவாலயத்திலிருந்து அழைத்திருந்தனர். பாலச்சந்திரனும் சென்றிருந்தார். இரண்டு தரப்பையும் விசாரித்த ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள், 'ஒரு பெரிய கட்சியில் இரண்டு மூன்று கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும், அப்போதுதான் கட்சி போட்டி போட்டு வளரும், அதே நேரத்தில் தேர்தல் வேலையில் கட்சியினரை தோற்கடிக்க முயற்சிக்கக் கூடாது, பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தை கட்சிக்குள் மட்டும்தான் சொல்ல வேண்டும். ஊடகங்களில் வெளிப்படுத்தக்கூடாது' என்று எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். 

இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்போதே வேலுச்சாமியை தூக்கிவிட்டு பொன்.முத்துராமலிங்கம் மகன், பொன்.சேது அல்லது டாக்டர் சரவணனை வடக்கு  மாநகர் செயலாளராக்கப் போகிறார்கள் என்று வதந்தியை தி.மு.க-வில் ஒரு குரூப் கிளப்பி விட்டார்கள். 

''வேலுச்சாமி சாதாரண ஆளா, தி.மு.க-வில் சிறு வயதிலிருந்து இருக்கிறவர். கட்சிக்கு சோதனை காலத்திலெல்லாம் உடன் இருந்தவர், இப்ப இருக்கிற கட்சியினர் பலர் அழகிரியிடம் சென்று வந்தவர்கள். ஆனால், ஆரம்பத்திலிருந்து அழகிரியிடம் செல்லாத தி.மு.க.காரர் என்றால் அது வேலுச்சாமிதான்.  அதனால், பாலச்சந்திரன் கூறிய பண விவகாரத்தை வைத்தெல்லாம் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்'' என்கிறார்கள் இன்னொரு சைடு தி.மு.க-வினர்.

 இதேபோல பல்வேறு புகார்களில் சிக்கியிருக்கும் மதுரை தெற்கு மாநகர் செயலாளர் கோ.தளபதியிடமும் விசாரணை நடந்ததாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close