Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை கோட்டத்தில் இணையும் கன்னியாகுமரி!

கன்னியாகுமரிமாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை, குமரிமாவட்ட ரயில் பாதைகளை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதுதான். இதற்காக அரசியல் கட்சியினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை  அனுப்பி வந்தன. ஆனால், மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இதில் இவர்கள் புகார்களாக தெரிவித்து இருந்த விஷயங்கள் , 'திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இருப்பதால் குமரிமாவட்ட  ரயில்வே ஸ்டேஷன்கள் சரியாக மேம்பாடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

போதிய அளவு ரயில்கள் இயக்கப்படுவதும் இல்லை. வரும் ரயில்களும் பயணிகளுக்கு பயன்படாத நேரங்களில்தான் வந்து போகிறது என்பன போன்றவை. குமரி மாவட்ட ரயில் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க அடிக்கடி போராட்டங்களும் நடந்து வந்தன. தொடர்ந்து மத்திய அரசுக்கு கொடுத்து வந்த அழுத்தத்தின் மூலம் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே பாதைகள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் இருந்து நேமம் திருநெல்வேலி வரையுள்ள ரயில் பாதையும், மதுரை கோட்டத்துடன் இணைய இருக்கிறது. இதற்கான பணிகளும்  தொடங்கிவிட்டன. அதற்குப் பதிலாக  இப்போது மதுரை கோட்டத்தின் கீழ் இருக்கும்  கொல்லம்- செங்கோட்டை ரயில்வே பாதை திருவனந்தபுரம் கோட்டத்துக்கு மாறிவிடும். 2015-ம் ஆண்டு பெறப்பட்ட ரயில்வே கோட்டம் தொடர்பான கோரிக்கைகளின் அடிப்படையில்  கோட்ட மாறுதல் பணிகள் தொடங்கி உள்ளன. திருவனந்தபுரம், திருநெல்வேலி, மேலப்பாளையம் வரையுள்ள 139 கிலோ மீட்டர் ரயில் பாதை இப்போது, திருவனந்தபுரம் கோட்டத்தில் வருகிறது.

இதனோடு கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையிலான 16 கிலோ மீட்டர் ரயில் பாதை மதுரை கோட்டத்துடன் சேருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி ரயில்வேயில் உள்ள பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்ததால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close