Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலத்தில் சிக்கிய லாரி! போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு!

ஜீவா பாலத்தின் கீழ் சென்ற கனரக வாகனம், பாலத்துக்கு நடுவே சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

ஜீவா பாலம்

சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ளது ஜீவா பாலம். இப்பாலத்தின் மேல்தான், வடமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களுமே செல்கின்றன. இந்நிலையில், இரவு 10.00 மணிக்கு அப்பாலத்தின் கீழ் சென்ற 'சிமென்ட் ரவை லாரி' உயரமாக இருந்த காரணத்தால், பாலத்தின் கீழ் சிக்கியது. எந்தப் பக்கமும் நகரமுடியாமல் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜீவா பாலம்

லாரியை மீட்க இரண்டு JCB இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் நள்ளிரவு 12.07 மணிக்கு லாரி மீட்கப்பட்டது. அதன்பிறகு டிராபிக் போலீஸார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close