Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட் உருவானக் கதை!

ஹாலிவுட் என்ற இடமே உலக சினிமாவின் தலைநகரமாக இருக்கிறது. இது ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது. இங்கு அமெரிக்காவின் திரைப்பட கலைஞர்கள் பலரும் வசிப்பதாலும், முன்னணி திரைப்பட ஸ்டுடியோக்கள் பல இருப்பதாலும் உலக அளவில் இந்த இடம் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த இடத்தின் நினைவாகத்தான் ஆங்கிலப் படத்தை மொத்தமாகவே ஹாலிவுட் என்று அழைக்கிறோம். 1870-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒதுக்குப்புற காட்டுப்பகுதியாகவே இது இருந்து வந்தது.

ஹாலிவுட்

1886-ம் ஆண்டில் இருந்துதான் இந்த இடம் அமெரிக்கர்களுக்கு தெரியவந்தது. நகரும் திரைப்படங்கள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காலத்தில் அதைக்கண்ட சில பிற்போக்குவாதிகள் ஆத்திரம் கொண்டனர். 'இது மாய மந்திர வேலை, இது ஆண்டவருக்கு எதிரான செயல்' என்று சினிமாவை எதிர்க்கத் தொடங்கினார்கள். இதனால் சினிமா படப்பிடிப்பைத் தடை செய்தனர். சினிமா கலைஞர்களை தாக்கி, படாதபாடு படுத்தினார்கள். படப்பிடிப்புக் கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை மோசமாகவே சினிமா கலைஞர்கள் எல்லோரும் எதிர்ப்பாளர்களுக்கு அஞ்சி மக்கள் இல்லாத இடமான ஹாலிவுட் பகுதிக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தத் தொடங்கினர். சினிமா படப்பிடிப்புகள் இங்கு அதிகமாக, அதிகமாக மக்கள் நெருக்கம் வேகமாக பெருக ஆரம்பித்தது. மெல்ல மெல்ல புகழ்பெற்ற இடமாக இது மாறியது.

காட்டுப்பகுதி ஒன்று வசதியான ஹாலிவுட் பகுதியானது. 1900-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் முக்கியப்பகுதியானது இது. 1907-ம் ஆண்டு பல வசதிகள் கொண்ட முனிசிபாலிட்டி ஆனது. 1910-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளப்பட்டது. ஹோலி வுட் என்ற பெயரே மருவி ஹாலிவுட் என்றானது. ஆரம்பத்தில் புனித சிலுவையைக் காட்டிக்கொண்டு இருந்த இடம் இது என்றும் சொல்லப்பப்படுகிறது. 1923-ம் ஆண்டு ஜூலை 13-ம் நாள்தான் ஹாலிவுட்டின் மலை மீது 'ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் ஹாலிவுட்லாந்து என்று எழுப்பப்பட்டது. பின்னர் இது மாற்றி எழுதப்பட்டது. இன்று உலகின் பிரமாண்ட பகுதியாக மாறி, சினிமாவுக்கு மட்டுமின்றி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலமாகவும் மாறி இருக்கிறது. உலகப்புகழ் பெற்ற படப்பிடிப்புத் தலமான ஹாலிவுட் குறியீடு அமைக்கப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close