Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் இப்போது இரண்டு படகுகள்தான்!

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி-யில்  கடல் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை  சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் விதமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என்று  மூன்று சுற்றுலாப் படகுகள்  இயக்கப்பட்டுவருகின்றன. தற்போது, திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் படகில் சென்று பார்த்து வர முடியும். 2013-ம் ஆண்டு, சுற்றுலா பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட விவேகானந்தா சுற்றுலா படகுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு பராமரிப்புப் பணி நடைபெற்றது . அதன் பிறகு, 2017-ம் ஆண்டுக்கான பராமரிப்புப் பணி இப்போது தொடங்கியுள்ளது.


 

அதற்காக, தமிழக அரசு சார்பில் 17.6 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கன்னியாகுமரி சின்னமுட்டம் படகு பராமரிப்புத் தளத்துக்குக் கொண்டுவந்து, விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு, படகில் இருக்கைகள் சரிசெய்தல், வண்ணம் பூசுதல் போன்ற பணிகளுடன் இயந்திரப் பராமரிப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று  வருகின்றன. மேலும், பராமரிப்புப் பணிகள் முடிந்து, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி விவேகானந்தா படகு, திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல இயக்கப்படும்.  

 

அதுவரை, குகன் மற்றும் பொதிகை சுற்றுலாப் படகுகள், பயணிகளை ஏற்றிச்செல்லும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close