Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை ஏன் சந்தித்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

இதோ வரப்போகிறார், அதோ வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் வருவதாக இல்லையே என்று தான் முணுமுணுப்புகள் கேட்கின்றன. இந்த ஆண்டில், அரசியலில் நுழையப்போவது உறுதி என்றே அவரது சந்திப்புகளும் சொல்லி வருகின்றன. முக்கிய கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த பலரை ரஜினிகாந்த் சந்தித்துவருகிறார். அவர்களிடம் அரசியல்குறித்த விவாதங்களையும் நடத்திவருகிறார். 'காலா' படப்பிடிப்பு முடிந்து, அவரது பிறந்தநாளுக்குள் கட்சியின் சின்னம் மற்றும் கொடி, பெயரை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி

ரஜினி அரசியலுக்கு வருவது தி.மு.க-வை பாதிக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்தான், தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ரஜினியைச் சந்தித்திருக்கிறார். இது, அரசியலில் பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் சந்தித்தவர் சாதாரண எம்எல்ஏ., இல்லை. மூன்று தலைமுறையாக கலைஞர் குடும்பத்தோடு பழகியவர்கள். அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி இவர்களைத் தொடர்ந்து, மூன்றாவது தலைமுறையாக தி.மு.க-வில் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் ரஜினியைப் பார்த்துள்ளார். இவர், ஸ்டாலினின் வலது கையாகவும் திருவெறும்பூர் தி.மு.க. எம்எல்ஏ-வாகவும் இருப்பவர்.

'ஏன் இந்தச் சந்திப்பு' என்று மகேஷைக் கேட்டால், 'இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு' என்று வழக்கமான பல்லவியைச் சொன்னார். ஆனாலும், இது ரஜினியின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கான சந்திப்பு என்கிறார்கள். இல்லை... இல்லை இப்போதைக்கு அரசியலுக்கு வரவேண்டாம் என்ற சமாதானத் தூது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ, 'கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு தான் வரணும்'னு சொல்வாங்க. ரஜினி மேட்டர் மட்டும் இப்படி முத்திக்கொண்டே போகிறதே.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close