Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவின் தலையீடு தேவையில்லை, இந்தியா திட்டவட்டம்

இந்தியா

ந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க உதவி செய்வதாக சீனா அறிவித்திருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே கூறுகையில், "காஷ்மீர் விவகாரம் உட்பட, இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதச் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டது பாகிஸ்தான்தான். குறிப்பிட்ட இடத்திலிருந்து தீவிரவாதம் பரவுகிறது. இது, அந்தப் பகுதியின் அமைதி மற்றும் வலுவுக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது.


ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாடு நிகழ்ச்சிகளுக்கு இடையே, பல்வேறு விவகாரங்கள்குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பதற்கு, இரண்டு நாடுகளுக்கிடையே தூதரகங்களுக்கு இடையேயான வழிமுறைகள் இருக்கின்றன" என்றார்.


சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென்ங் ஷனாங் கூறுகையில், "தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் முக்கியமானவை. ஆனால், காஷ்மீர் நிலவரம்தான் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இது, இருநாடுகளுக்கு இடையேயான அமைதி மற்றும் வலுவை மட்டும் சீர் குலைக்கவில்லை. ஆசியப் பகுதியில் நிலவும் அமைதியைச் சீர் குலைக்கிறது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close