Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இதே நிலை நீடித்தால் ஆட்சி கவிழும்': எச்சரிக்கும் மாஃபா பாண்டியராஜன்!

ஜெயலலிதா மறைவு, சசிகலா பொதுச்செயலாளர், ஓ. பன்னீர்செல்வம் போர்க் கொடி, சசிகலா சிறை, எடப்பாடி பழனிசாமி முதல்வர், டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச்செயலாளர், டி.டி.வி. தினகரன் சிறை என்று கடந்த ஆறு மாதங்களாக அ.தி.மு.க-வில் நடந்த அத்தனை காட்சிகளும் நாம் பார்த்ததுதான். தற்போது, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் என்று மூன்று அணிகளாக அ.தி.மு.க. சிதறிக்கிடக்கிறது.

மஃபா பாண்டியராஜன்


அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கூறினாலும், தினசரி முட்டல், மோதல் கருத்துகள்தான் வெடித்து வருகின்றன. உச்சக்கட்டமாக, ஆளுங்கட்சி எம்எல்ஏ., தங்க தமிழ்ச்செல்வனே சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.  இதனிடையே, அணிகள் பேச்சுவார்த்தைக்கான குழுவைக் கலைத்து, அணிகள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதல்வர்            ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறினார்.


இது நாள் வரை, 'நாங்கள் ஆட்சியைக் கலைக்க மாட்டோம்... எங்களால் ஆட்சி கவிழாது...' என்று கூறி வந்த ஓ. பன்னீர்செல்வம் அணியிலிருந்து, 'விரைவில் ஆட்சி கவிழும்' என்று கருத்து வந்துள்ளது. இந்தக் கருத்தைக் கூறியவர், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன். ஆவடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாண்டியராஜன், "அணிகள் இணைவதில் இதே நிலை நீடித்தால், தமிழக அரசு விரைவில் கவிழும். அது நிகழக்கூடாது என்பதுதான் எங்களது விருப்பம். சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் இணைய வேண்டும்" என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close