Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் தமிழ் உள்ளதா... முன்னாள் அமைச்சரின் பதில்!

'உலகில், அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் உள்ளது' என்று முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். 

pandiyarajan
 

அழியும் நிலையில் உள்ள மொழிகள் பட்டியலில் தமிழ் உள்ளதாக, எம்எல்ஏ., தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சிலர்  கூறிவருகின்றனர். இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் ’செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முத்திரையில், தமிழ் எழுத்துகள் இடம்பெற, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாரா’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்த விவாதம் நடைபெற்றது. 
இதனிடையே பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், ’யுனெஸ்கோ வெளியிட்ட அழிந்துவரும் மொழிகள் பட்டியலில், தமிழ் இல்லை. அதிகம் பேசக்கூடிய மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் உள்ளது ’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close