Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய கிரிக்கெட்டுக்கு நாகப்பட்டினம் தந்த 'லேடி' சச்சின்!

 

களிர் கிரிக்கெட் உலகில், 'லேடி' சச்சின் என்று அழைக்கப்படும் மிதாலி ராஜ் இந்திய அணியின் கேப்டன். இதுவரை 183 ஆட்டங்களில் ஆடி 6,028 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். கிரிக்கெட் உலகில், மிதாலி பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். 17-வது வயதிலேயே, களம் கண்ட முதல் ஆட்டத்திலேயே சதமடித்து அசரவைத்த வீராங்கனை.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த லேடி சச்சின்

மிதாலியின் சாதனைகளுக்கு தமிழகமும் உரிமைகொண்டாட முடியும். ஏனென்றால், மிதாலி ராஜ் தமிழகத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்து, ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டாலும் அவரின் சொந்த ஊர், நாகப்பட்டினம். தந்தை துரைராஜ், தாயார் பெயர் லீலா.

மிதாலியின் தந்தை துரைராஜ் விமானப்படையில் பணிபுரிந்ததால், பல ஊர்களுக்கும் இடம் பெயரவேண்டிய  நிலை. ஒரு கட்டத்தில் ஹைதராபாத்தில் மிதாலியின் குடும்பம் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியது. வீட்டில் எல்லோரும் தமிழ்தான் பேசுவார்கள். மிதாலிக்கும் தமிழ் நன்றாகப் பேசத் தெரியும்.

10 வயதில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்த மிதாலி,  உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தருவாரா என இப்போது நாடே காத்திருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close