Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுதலை வேட்கைகொண்டவர் சிறையிலேயே உதிர்ந்தார்! #LiuXiaobo

சீனாவில், ஜனநாயகம் வேண்டி போராடிய பேராசிரியர் லியூ ஜியோபோ, கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் காவலிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.

ஜியோபோ மரணம்

தலைசிறந்த மனித உரிமைப் போராளியான ஜியோபோ, சீனாவில் ஜனநாயகம் தழைக்க அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டி 2008-ம் ஆண்டு 'சார்ட்டர் 08' என்கிற மனுவைக் கொண்டுவந்தார். சீன அரசைக் கவிழ்க்க முயல்வதாக அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த ஜியோபோவுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.

தொடர்ந்து, ஷான்யாங் நகர மருத்துவமனையில் காவலில் சிகிச்சைபெற்று வந்தார். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஜியோபோவை தங்கள் நாட்டுக்குக் கொண்டுவந்து சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்தன. சீனா பிடிவாதமாக மறுத்துவிட்டது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானதையடுத்து, வேதனையைக் குறைக்கும்பொருட்டு செயற்கைச் சுவாசத்தை நிறுத்தும்படி அவரின் மனைவி கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று ஜியோபோ மரணம் அடைந்தார். 

ஜியோபோ மரணம்

2010-ம் ஆண்டு, ஜியோபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்று நோபல் பரிசை பெற, அவரை சீன அரசு அனுமதிக்கவில்லை. நோபல் பரிசு வழங்கும் மேடையில் ஜியோபோவுக்கு இருக்கை அளிக்கப்பட்டு, பதக்கமும் சான்றிதழும் அதில் வைக்கப்பட்டிருந்தன. 'எனக்கு எதிரிகள் இல்லை... இதுவே என் கடைசிச் செய்தி' என ஜியோபோ நோபல் பரிசு கமிட்டிக்கு ஏற்புரை அனுப்பியிருந்தார். அவரின் ஏற்புரை விழா மேடையிலேயே வாசிக்கப்பட்டது.

'வேட்கைகொண்ட மனிதனை யாராலும் அடக்கி ஆள முடியாது' என்கிற வார்த்தையை ஜியோபோ அடிக்கடி உதிர்ப்பார். ஆனால், மரணிக்கும் தருணத்தில்கூட சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே உதிர்ந்துபோனார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close