Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக வட்டி தருகிறோம் என்று கூறி ரூ.200 கோடி சுருட்டல்! 5 ஆயிரம் பேரை அதிரவைத்த நிதி நிறுவனம்

ஏலச்சீட்டு மற்றும் நிரந்தர வைப்புக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து 200 கோடி ரூபாயை சித்ரா ஃபைனான்ஸ் நிதி நிறுவனம் மோசடிசெய்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம், திருச்சியைக் கலங்கடித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில், 'சித்ரா ஃபைனான்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனத்தை ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி விஜயநிர்மலாவும் நடத்திவந்தனர். இவர்கள், இந்த நிறுவனத்தின்மூலம் பொதுமக்களிடம் ஏலச்சீட்டுகள் மற்றும் நிரந்தர வைப்புகளும் வசூலித்து, அதற்கான வட்டியும் கொடுத்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சித்ரா ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தைத் திடீரென பூட்டிவிட்டு, அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், இதுகுறித்து தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிறுவனத்தின் மோசடி ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்பதால், அனைத்துப் புகார்களும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், சித்ரா ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த வாடிக்கையாளர்கள் சிலர், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மனோகரன், ''சித்ரா ஃபைனான்ஸ் நிறுவனம், கிராம மக்களையும் நடுத்தர மக்களையும் குறிவைத்து, ஏலச்சீட்டு நடத்தியது. தங்களிடம் வைப்பு நிதி வைத்தால், கூடுதல் வட்டி வழங்குவதாகக் கூறினார்கள். இதை நம்பி, ஆடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டினார்கள். திடீரென அவர்கள் தலைமறைவானதால், நாங்கள் அனைவரும் ஏமாந்து நிற்கிறோம். அவர்கள் அனைவரும் திருச்சி வந்து புகார் செய்வது கஷ்டம் என்பதால், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆடுதுறையில் முகாம் அமைத்து புகார்களை வாங்க வேண்டும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close