Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ சேர்க்கை! தமிழக அரசின் 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர் நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி

மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. 'இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியிட்டது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்துசெய்தது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை இருக்கக்கூடாது. உள் ஒதுக்கீடு இன்றி, ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடு அடிப்படையிலேயே சேர்க்கை நடத்த வேண்டும். புதிய தர வரிசைப் பட்டியலைத் தயார்செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது, உயர் நீதிமன்றம்.

இதனிடையே, 'உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்' என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close