Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி போலீஸ் பல்டியால் டி.டி.வி.தினகரன் வழக்கில் திடீர் திருப்பம்!

இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரனின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

Dinakaran

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலீஸார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.  ஜூன் 1-ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தினகரனின் பெயர் இல்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் இந்த வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே,  கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி அணியைக் கலங்கடித்துள்ளார் தினகரன். அ.தி.மு.க-வில் இருந்து விலகிக் கொள்வதாக முன்னர் அறிவித்த தினகரன், தற்போது அ.தி.மு.கவைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் விடுவிக்கப்பட்டால், அவருக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close