Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக சோம்பேறிகள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 39 வது  இடம்! 

மெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், உலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடுகள்குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. சுமார் 46 நாடுகளில், 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இந்தியா 39 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில், மக்கள் ஒரு நாளைக்கு 4,297 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். மேலும், இந்தியப் பெண்கள், ஆண்களைவிட மிகவும் குறைவான அடிகளே நடக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலான  இந்தியர்கள், வெளியில் செல்ல வாகனங்களைச் சார்ந்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். 

Lazy people

இந்தப் பட்டியலில், நியூஸிலாந்து மற்றும் இந்தோனேஷியா மிகவும் சோம்பேறியான நாடுகளாக அறிவிக்கப்பட்டன. இந்த நாடுகளில், ஆண்களைவிட பெண்களுக்கு உடல் பருமன் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. மேலும், இந்த நாட்டு மக்கள் நாள் ஒன்றுக்கு 3,513 அடிகளே நடப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.  

உலகில் சுறுசுறுப்பான நாடுகளில், சீனா மற்றும் ஹாங்காங் முதல் இடத்தில் இருக்கின்றன. இந்த நாட்டு மக்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு 6,880 அடிகள் நடக்கிறார்களாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close