Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த கல்வி அமைச்சர்!

நடிகர் கமல்ஹாசனை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஒருமையில் விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

anbazhagan
 

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன்,  ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லா துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் உள்ளது எனக் குறிப்பிட்டுப் பேசினார். கமலின் இந்தக் கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். ’தான் நடத்தும் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அரசின்மீது சேற்றை வாரி வீசுவதா’ என்று  கமல்ஹாசனுக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக அரசைப் பற்றி கமல் விமர்சித்ததைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அன்பழகன், ”கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் ஓர் ஆளே கிடையாது" என்று கமலை ஒருமையில் விமர்சித்தார். இதற்கு, கமல் ரசிகர்கள் இணையத்தில் அமைச்சரைச் சாடி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close