Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவை மிஸ் பண்ற ஃபீலிங்கே இல்லை...!'- மல்லையா கொக்கரிப்பு

'குடும்பத்தினர் எல்லாமே இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ வசிக்கிறார்கள் இந்தியாவில்  யாருமே இல்லை. இந்தியாவை மிஸ் பண்ற மாதிரி  ஃபீலிங்கே ஏற்படவில்லை' என விஜய் மல்லையா கூறியுள்ளார். 

லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையா

இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், தற்போது லண்டனில் வாழும் விஜய் மல்லையா உற்சாகமாகப் பொழுதைக் கழித்து வருகிறார். கிரிக்கெட் போட்டிகளுக்குப் போவது, விம்பிள்டன் டென்னிசுக்குப் போய் தலையைக் காட்டுவது, ராயல் ஆஸ்கட்டில் குதிரைகள் மீது பந்தயம் கட்டுவது, கார் பந்தயங்கள் நடந்தால் அங்கே போய் அட்டென்டன்ஸ் போடுவது என மல்லையாவின் இங்கிலாந்து வாழ்க்கை ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

லண்டனில் புதன்கிழமை எஃப்- 1  கார் பந்தயத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கேயும் அட்டென்டன்ஸ் போட்ட விஜய் மல்லையா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 'இந்தியாவை மிஸ் பண்ற ஃபீலிங்கே எனக்கு இல்லை ' எனக் கூறியுள்ளார். ''எனது ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் கூட பிரிட்டனில்தான் வசிக்கின்றனர். பின்னர் நான் இந்தியா பற்றி யோசிக்க என்ன இருக்கிறது. உறவுமுறையில் இந்தியாவில் நான் யாரையும் மிஸ் பண்ணவில்லை. பிரிட்டன் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது ' எனக் கூறியுள்ளார். 

விஜய் மல்லையாவை  ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வழக்கு விசாரணை தொடங்குகிறது. இதற்கிடையே , 'மல்லையாவை ஒப்படைத்தால்,  எந்தச் சிறையில் அடைப்பீர்கள்' என பிரிட்டன் அரசு இந்தியாவிடம்  கேட்டிருந்தது. 'மும்பை ஆர்தூர் சாலை சிறை பாதுகாப்பு மிகுந்தது' என இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close