Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்: அதிருப்தி தெரிவிக்கும் இயக்குநர் சுசீந்திரன்!

சுசீந்திரன்

2009 முதல் 2014-ம் ஆண்டு வரைக்குமான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பிரிவு வாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது அறிவிப்பு தொடர்பாக, 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுசீந்திரன், ஃபேஸ்புக் பக்கத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். 

சுசீந்திரனின் பதிவு


'நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரையுலகிற்கு விருதுகளை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மனமார்ந்த நன்றி. இந்தப் பட்டியலில், என்னுடைய படம் ஏதும் தேர்வுசெய்யப்படாததற்காகத் தேர்வுக்குழுவினருக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்கு விருது அளிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது. 'நான் மகான் அல்ல' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கும் அனல் அரசுக்கு விருது வழங்கப்படாதது ஏன் எனவும் ஆச்சர்யமாக இருக்கிறது. விருதுபெற்ற திரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close