Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவு நேரத்தில் திடீர் விசிட்... காவலர்களை பதறவைக்கும் போலீஸ் கமிஷனர்!

நகரமே தூங்கி வழியும் நடுச்சாமத்தில் காவல் நிலையங்களும் தூங்கி வழிவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மதுரையோ தூங்காநகரம். போலீஸ் தூங்கலாமா. கண் அயர்கிற அந்த நேரம் எந்தத் தகவலும் சொல்லாமல் கமிஷனர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்றால் எப்படி இருக்கும.  இரவில் போலீஸ் எவ்வளவு அலெர்ட்டாக இருக்கிறார்கள் என்பதை அறிய இரவு நேரங்களில் சர்பரைஸ் விசிட் அடித்து காவலர்களைப் பதறவிடுகிறார் மதுரையின் புதிய போலீஸ் கமிஷனர்.

 

மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்ட பின் மதுரை காவல்துறையே சுறுசுறுப்பாகிவிட்டது. எங்கே எப்போது வந்து நிற்பார் என்று கதிகலங்கியுள்ளனர் காவலர்கள். தனக்குக் கீழேயுள்ள அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அலுவலகத்திலேயே அமர்ந்துகொண்டு அதன்படி செயல்படுபவர் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தனர். ஆனால், இவர் வேறு மாதிரியாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே மாநகர லிமிட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தைப் பற்றியும், அப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், அங்கு பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் பற்றியும் ரெஃபர் செய்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாள்களாக நள்ளிரவில் தனி ஆளாக காரை எடுத்துக்கொண்டு நகர் முழுவதும் ரவுண்ட்ஸ் அடித்தார். அண்ணா நகர் காவல் நிலையத்துக்கும் தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கும் விசிட் அடித்தார். மறுநாள் புதூர் காவல் நிலையத்துக்கு விசிட் அடித்தார். நள்ளிரவில் கமிஷனரைப் பார்த்து காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, அவர்களிடம் விசாரித்துவிட்டு கிளம்பி விட்டார். நல்ல வேளை எந்தக் காவலரும் தூங்கி மாட்டிக்கொள்ளவில்லை. தினமும் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கமிஷனரின் விசிட் தொடரும் என்பதால் மதுரையில் அனைத்து காவல் நிலையங்களும் இப்போது ரொம்ப அலெர்ட்டாக இருக்கின்றன. இப்படியே தொடரட்டும் கமிஷனரின் நடவடிக்கை!

 

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close