Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடியில் 200 கிலோ கடல் அட்டையைப் பதுக்கிய இருவர் கைது

தூத்துக்குடியில் மத்தியரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடல் அட்டை, மலேசியா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு மத்திய வனத்துறை அமைச்சகம் கடல் அட்டைகளை அழிந்துவரும் இனப்பட்டியலில் சேர்த்து, இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு தடை விதித்தது.

இருப்பினும், வெளிநாடுகளில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு கடலோரப் பகுதிகளில் சிலர் கடல் அட்டைகளைப் பதுக்கி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முற்படுவதும் அவர்களை போலீஸார் கைது செய்து கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கிறது.

இன்று தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாள்களாகத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, வனத்துறை மற்றும் தருவைகுளம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் இணைந்து அந்த வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் பிளாஸ்டிக் பேரல்களில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளையும், அத்துடன் 4 பிளாஸ்டிக் பேரல்கள், சிலிண்டர், காஸ் அடுப்பு, மாருதி கார்  ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கடல் அட்டைகள் பதுக்கல் மற்றும் பதப்படுத்தலில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த முருகன் மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரவி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close