Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிசிடிவி கேமராவில் தூசி... சட்டப்பேரவையில் சமாளித்த முதல்வர்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தின் மீது நேற்று அதிகாலை மர்ம நபர்கள் மண்ணெண்ணை குண்டை எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  குண்டு வீச்சால் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. காவல் நிலையத்திலேயே குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையிலும் குண்டு வீசப்பட்ட சம்பவம் இன்று எதிரொலித்தது.

Teynampet police station
 

’தமிழகத்தில் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை. குண்டு வீசி சென்றவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறது. சிசிடிவி கேமராக்கள் இருந்தும் பயனில்லை’ என்று எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் 12 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 பேரில் ஒருவரின் முகம் சிசிடிவி பதிவில் காணப்படும் ஒருவரின் முகத்துடன் ஒத்துப்போவதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராவில் சாலை தூசிகள் படிந்துள்ளதால் உருவங்கள் சரியாகத் தெரியவில்லை’ என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close