Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி BMW கார்களிலும் ஸ்கைப்!

மொபைல் போன்கள், கணினிகள் மட்டுமன்றி கார்களிலும் தங்களை சேவைகளை நீட்டிக்கும் நோக்கத்தில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பி.எம்.டபிள்யூ, வால்வோ போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மெருகேற்றுவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. அந்த வகையில் ஸ்கைப் ஃபார் பிசினஸ் வசதியை விரைவில் தன் கார்களுக்கு கொண்டுவரவிருக்கிறது பி.எம்.டபிள்யூ.

பி எம் டபிள்யூ கார்களில் ஸ்கைப்

ஏற்கெனவே ஆபிஸ் 365 மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட கர்ட்டானா போன்ற வசதிகளை அறிவித்த பி.எம்.டபிள்யூ, தற்போது ஸ்கைப்  ஃபார் பிசினஸ் வசதியையும் தன் கார்களில் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. பி.எம்.டபிள்யூவின் ஐ டிரைவ் வசதியுடன் ஒருங்கிணைந்து இந்த ஸ்கைப் இயங்கும். 

பி.எம்.டபிள்யூ 5 சீரிஸில் தொடங்கி அனைத்து கார்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும். முதலில் யுனைட்டட் கிங்டம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் மட்டும் இதைச் செயல்படுத்த பி.எம்.டபிள்யூ திட்டமிட்டுள்ளது. பின்னர், மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close