Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் கலெக்டரிடம் தவறாக நடந்து கொண்ட எம்எல்ஏ கைது

தெலுங்கானா

ஹைதராபாத் மகாபூபாத் மாவட்ட எம்எல்ஏ சங்கர் நாயக், பெண் கலெக்டரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மகாபூபாத் மாவட்டத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்மாவட்ட எம்எல்ஏ சங்கர் நாயக் கலந்து கொண்டார். எம்எல்ஏ-க்கும், அம்மாவட்ட பெண் கலெக்டருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதத்தின் போது பெண் கலெக்டரின் கையைப் பிடித்து எம்எல்ஏ சங்கர் நாயக் இழுத்துள்ளார். இக்காட்சிகள் அங்குள்ள தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கலெக்டர் போலீஸில் எம்எல்ஏ மீது புகார் கொடுத்துள்ளார்.

பெண் கலெக்டரின் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எம்எல்ஏ-வின் இந்த நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகளும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட பின்னரும், எம்எல்ஏ தனது குற்றத்தை மறுத்துள்ளது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் எம்எல்ஏ-விடம் விளக்கக் கடிதம் கேட்டு எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close