Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலும், ஜெயராமும் சேர்ந்து விட்டாலே காமெடி மேளா


               

                             ஆரம்பத்தில் இருந்தே கமலுக்கு மலையாள சினிமா உலகில் மவுசு அதிகம். கேரளாவில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் 'நான் தமிழ்சினிமாவில் பெரிய ஹீரோவாக இருந்தாலும் எனக்கு ஆரம்பத்தில் திரைப்பட வாழ்வு கொடுத்த மலையாள சினிமாதான் எனக்கு தாய்வீடு' என்று பகிரங்கமாககே அறிவித்தார், கமல். மலையாள சினிமா உலகில் இருக்கும் பிரபலமான நடிகர்கள் பலபேர் கமலுக்கு நண்பர்கள் என்றாலும் அவ்விட பூமியில் கமலின் நெஞ்சம் கவர்ந்த கலைஞன் ஜெய்ராம். முன்பு ஒருமுறை கே.எஸ்.ரவிக்குமார்  'தெனாலி' படத்தை தயாரித்து இயக்க நினைத்தார். அந்தபடத்தில் நடிக்கும் ஹீரோயின் ஜோதிகா அண்ணனாகவும், தேவயானி கணவனாகவும் நடிக்கும் கேரக்டருக்கு யாரைப் போடுவது என்று தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருந்தார், ரவிக்குமார். அப்போது அங்குவந்த கமல் விஷயத்தைக் கேள்விப்பட்டு ' அந்த கேரக்டருக்கு ஜெய்ராமைப் போடுங்க, பொருத்தமாக இருப்பார்' என்று சொல்ல உடனே ஜெய்ராமை ஒப்பந்தம் செய்து அவரிடம் கால்ஷீட் வாங்கினார், ரவிக்குமார்.

அடுத்து 'பஞ்சதந்திரம்' படத்தில் கமலின் நான்கு நண்பர்களாக நடிக்கும் வேடங்களில் எந்தெந்த நடிகர்களை நடிக்க வைப்பது  என்கிற குழப்பம் ஏற்பட்டது. கமலுக்குக் கன்னடத்தில் பிடித்த ரமேஷ் அரவிந்தையும், மலையாளத்தில் பிடித்த ஜெய்ராமையும் டிக் செய்தார். கமல் சொன்ன வார்த்தைக்கு எதிர்வார்த்தை எதுவுமே பேசாமல் ஜெய்ராமை ஒப்பந்தம் செய்தார், தயாரிப்பாளர். ஏனென்றால் பஞ்சதந்திரம் படத்தயாரிப்பாளர் தேனப்பனும், ஜெய்ராமும் கேரளாவில் ஒரேபள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.  இப்போது கமலும், ஜெய்ராமும்  ஏதாவது ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் அம்புடுதேன் அந்த இடமே அதகளம்தான். ஜெய்ராம் மிமிக்ரி செய்வதில் மெகா கில்லாடி.  பரதநாட்டிய பாடல் போன்று ஜெய்ராம் குரல்மாற்றி விதவிதமாக மிமிக்ரி செய்வதும், அதற்கு தகுந்தாற்போல் கமல் முகத்தை அஷ்ட கோணலாக்கி அபிநயம் காட்டும்போதும் அருகிலிருந்து பார்ப்பவர்கள் சிரித்து சிரித்து தெறித்து போய்விடுவார்களாம்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close