Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - ஜிம்பாப்வே வீரர் எர்வின் சதம்! #ZimVsSL

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணி 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரீமர், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கணா ஹெராத்தின் நேர்த்தியான பந்துவீச்சால், ஜிம்பாப்வே அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஜிம்பாப்வே வீரர் கிரேய்க் எர்வின் மட்டும் நிலைத்து நின்று விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். மால்கம் வாலர், சிக்கந்தர் ரசா ஆகியோர் ஒரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடினர். 

ஜிம்பாப்வே - இலங்கை டெஸ்ட் போட்டி 2017 கிரிக்கெட்

முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்திருக்கிறது. ட்ரிபனோ 24 ரன்களுடனும் கிரேய்க் எர்வின் 151 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹெராத் 4 விக்கெட்டுகளையும் குணரத்னே 2 விக்கெட்டுகளையும் விழ்த்தினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close