Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கா இரண்டாமிடம்... இந்தியா முதலிடம்... இது ஃபேஸ்புக் கணக்கு!

பேஸ்புக் இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை “Eating கடலை மிட்டாய் With Mani and 2 others in அத்திப்பட்டி” என்று குக்கிராமத்தில் இருப்பவர்கள் கூட ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு ஃபேஸ்புக் பிரபலம். “ஃபேஸ்புக்கை மாதந்தோறும் 2 பில்லியன் பேர் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்!” என்று மார்க் மார்தட்டி சிறிது நாள்களே ஆன நிலையில், தற்போது அதை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

240 மில்லியன் பேர் எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்ற எட்டிப்பிடிக்க முடியா உயரத்தில் இருந்த அமெரிக்காவைத் தற்போது இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஏலம் கேட்பது போல், அமெரிக்காவை விட 1 மில்லியன் அதிகம் சென்று 241 மில்லியன் என்ற சாதனை மைல்கல்லை இந்தியா எட்டி முதல் இடம் பிடித்துள்ளது. இதுமட்டுமல்லாது இந்தியாவில் மட்டும் அமெரிக்காவை விட ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 மாதங்களில் மட்டும் ஃபேஸ்புக்கர்ஸ் இந்தியாவில் 27 சதவிகிதம் அதிகமாகியுள்ளனர். இதில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் கீழே இருப்பவர்கள்! மொத்த எண்ணிக்கையில் இங்கு நான்கில் மூன்று பங்கு ஆண்கள்தான். ஆனால் அமெரிக்காவிலோ 54% பெண்கள்தான் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close