Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சாவூரில் அரசுப் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..! 9 பேர் பலி

தஞ்சாவூர் வல்லம் அருகே அரசு பஸ்ஸூம் மினி லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. 

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற இச்சாலை விபத்தில், பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சும், தஞ்சாவூர் சென்ற மினி லாரியும் வல்லம் மேம்பாலம் அருகே  மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் மற்றும் மினிலாரி டிரைவர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

அந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close