Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலர்களில் உள்ள மருத்துவ பலன்கள்

கூந்தலில் சூட்டி அழகு பார்க்கப்பட்ட பூக்கள், இறைவனுக்கு சார்த்தி பெருமை செய்யப்பட்ட பூக்கள், ஜாடிகளில் அடுக்கி அலங்கரிக்கப்பட்ட பூக்கள், பரிசளித்து பரவசப்பட்ட பூக்கள் இப்போது மருத்துவத்திலும் பெருமளவில் பயன்பட்டு வருகிறது. எந்த மலர் எந்த விதத்தில் பயனாகிறது என்பதைப் பார்ப்போம். 

மருதாணிப் பூவை தூங்கச் செல்லுமுன் தலையில் வைத்துக்கொண்டால் அல்லது படுக்கையில் வைத்துக் கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும். மனரீதியாக பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பூவை வைத்துக்கொண்டால் பிரச்னை அகன்றுவிடும். மல்லிகைப் பூக்கள் களைப்பை நீக்கி புத்துணர்ச்சி தரும். கண் வியாதிகளை நீக்கும். மல்லிகை மணம் தாம்பத்திய உறவை நீடிக்கச் செய்யும். ரோஜா மலரின் இதழ்கள் வாய்ப்புண், குடல் புண், தொண்டை புண்ணை ஆற்றும். சீறுநீர் கடுப்பை நீக்கும். காது வலி, காதுப்புண்ணை ரோஜா தைலம் குணமாக்கும். மூலச்சூடு, மலச்சிக்கல், ரத்த சுத்திகரிப்பு போன்றவைக்கும் ரோஜா நல்ல மருந்து. இலுப்பை மலர்கள் ஆண்மைக் குறைவுக்கு அரிய மருந்து. சளி, மூக்கடைப்புக்கு தூதுவளை மலர் நல்லது.

மலர்

தாமரை மலரை சுத்தம் செய்து குடிநீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் ரத்த மூலம், சீதபேதி குணமடையும். மூளை வளர்ச்சிக்கு தாமரை மலர் முக்கிய மருந்தாகும். தாமரை விதையை சாப்பிட்டால் ரத்த விருத்தி உண்டாகும். உடல் சூடு குறையும்.முருங்கைப்பூ தாது வளர்ச்சிக்கு உகந்தது. வேப்பம்பூ குடலை சுத்தம் செய்து பூச்சிகளை கொல்லும். மகிழம்பூ காது வலியை சரி செய்யும். எருக்கம் பூ குஷ்டநோயை குணப்படுத்தும் என்று சித்த வைத்திய முறை கூறுகிறது.

அரளிப்பூ தலையில் உள்ள பேன்களை கொல்லும். அல்லி மலரின்  இதழ்களையும், அதன் உள்பகுதியையும் அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் குறையும். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூ கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் நோய் கட்டுப்படும். குங்குமப்பூ, புங்கைப்பூ, அத்திப்பூ, நெல்லிப்பூ, செம்பருத்திப்பூ என மருத்துவ குணம் நிறைந்த மலர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. மலர்களைக் கொண்டு மகத்தான வாழ்க்கை வாழலாம் என்று நமது பாரம்பர்ய வைத்திய முறை உறுதியாகச் சொல்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close