Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சைகளுக்கு இடையேயும் மோடிக்கு 73 சதவிகித மக்கள் ஆதரவாம்!

மோடி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி, மோடி அரசுக்கு 73 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. உலகிலேயே நம்பிக்கை உள்ள அரசாங்கம் என்ற பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
உலகில் அதிக நம்பிக்கை கொண்ட அரசுப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது சுவிட்சர்லாந்து. இந்த அரசுக்கு 80 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 79 சதவிகித மக்கள் ஆதரவுடன் இந்தோனேசியா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் 30 சதவிகித ஆதரவைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-வுக்கு 41 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் மோடிக்கு 73 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
தலித்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ஜிஎஸ்டி குழப்பம், ரூபாய் நோட்டுகள் வாபஸ் சர்ச்சை, இறைச்சிக்காக மாடுகளை வெட்டக் கூடாது என்ற உத்தரவு என்பது உள்ளிட்ட பிரச்னைகளை மீறி  மோடியின் அரசு மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close