Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தேஜஸ்வி ராஜினாமா செய்ய மாட்டார்': லாலு உறுதி!


லாலு பிரசாத் யாதவ்லாலு பிரசாத் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வியின் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்திய விவகாரம் பீகார் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், "என்னுடைய மகன் தேஜஸ்வி யாதவ் தானாகப் பதவி விலக மாட்டார். ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதற்காக பதவி விலகத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை அவர்கள் செய்யட்டும்" என்று சொல்லி இருக்கிறார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங், "2010-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எத்தனை இடங்கள் கிடைத்தது என்பதை ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். நிதிஷ் குமாருடைய, சுத்தமான மனிதர் என்ற இமேஜ்தான் சடட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணி 178 இடங்களைப் பிடிப்பதற்கு காரணமாக இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களைப் பிடிக்க முடிந்தது" என்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் இன்னொரு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், "சி.பி.ஐ வழக்கைச் சந்திப்பவர்கள், தங்களுடைய சொத்து விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லி உள்ளார்.
ஆனால், சி.பி.ஐ சோதனை காரணமாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இந்த வேளையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் உள்ள சிலர், "தேஜஸ்வி ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவருக்குப் பதில் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவை, பீகார் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்" என்று கூறி இருக்கின்றனர். சி.பி.ஐ-யின் அதிரடி சோதனைகள் காரணமாக பீகார் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பி.ஜே.பி வேடிக்கை பார்க்கிறது. "நிதிஷ்குமார் நேர்மையானவர் என்றால், இந்த விஷயத்தில் விரைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்று பி.ஜே.பி தலைவர் ஒருவர் கூறுகிறார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close