Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலா வளர்ச்சிப் பணிகளுக்காக கன்னியாகுமரிக்கு 31 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பகுதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கடந்த தி.மு.க.ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன்  பல சுற்றுலா வசதிகளை குமரி மாவட்டத்தில் ஏற்படுத்தினார். தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன் அடிக்கடி குமரிக்கு வந்து சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசின் சார்பில் சுவாதி தர்சன் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. சுற்றுலா மேம்பாட்டுப்  பணிகள் மேற்கொள்ள முதற்கட்ட ஆய்வுப் பணிகளை சுற்றுலாத்துறை இணை ஆணையர் இளங்கோ,  மாவட்டச் சுற்றுலா அதிகாரி நெல்சன் மற்றும் விஜயகுமார் எம்பி. ஆகியோர் மேற்கொண்டனர்.

சுற்றுலா மேம்பாட்டுப்  பணி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி உள்பட பல கடலோர பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்காக 31 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான இடங்களை தமிழக சுற்றுலாத்துறை இணை ஆணையர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்  குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இணைக்கும் வகையில் பாலம் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மையங்கள் வளர்ச்சிப் பெற்று இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close